கொழும்பு, களுத்துறை, கம்பஹா மாவட்டங்களிலிருந்து பயணிப்பவர்களுக்கான தகவல்..!

Friday, 15 January 2021 - 12:11

%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%2C+%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%2C+%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B9%E0%AE%BE+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D..%21
மேல் மாகாணத்தில் இருந்து வெளியேறும் 11 இடங்களில் நேற்றைய தினம் 326 பேருக்கு றெபிட் எண்டிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளபபட்டுள்ளன.

அவற்றில் 7 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளதாக காவல்துறை பேச்சாளர் பிரதிக் காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மேல் மாகாணத்திற்கு வெளியே முகக்கவசம் அணியாமை தொடர்பில் கடந்த 24 மணிநேரத்தில் 24 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதன்படி, கடந்த ஆண்டு ஒக்டோபர் 30ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் முகக்கவசம் அணியாமை தொடர்பில் கைதுசெய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 514 ஆக அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், பொதுமக்கள் அனைத்து சந்தர்ப்பங்களிலும் தனிமைப்படுத்தல் விதிமுறைகளுக்கு அமைய செயற்பட்டு, சுகாதார ஆலோசனைகளை பின்பற்றுமாறு காவல்துறை பேச்சாளர் கோரியுள்ளார்.