மஹரகமவில் பொது ஜன பெரமுனவின் உறுப்பினர்கள் ஆர்பாட்டத்தில்...!

Friday, 15 January 2021 - 13:22

%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%B0%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%9C%E0%AE%A9+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D...%21
மஹரகம நகரசபையின் பொது ஜன பெரமுனவின் உறுப்பினர்கள் மற்றும் வர்த்தகர்கள் சிலர் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இவர்கள் இன்று முற்பகல் முதல் இவ்வாறு எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மஹரகம பகுதியில் பழைய பேருந்து தரிப்பிடத்திற்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத வர்த்தக நிலையங்களை அகற்றுவதற்கு நேற்று முன்தினம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது வர்த்தகர்களுக்கும் நகரசபையின் உறுப்பினர்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து குறித்த வர்த்தக நிலையங்களை மூடுவதற்கு காவல் துறையினர் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த ஆர்பாட்டம் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.