வெளிநாடுகளிலிருந்து பிரித்தானியாவுக்குள் பிரவேசிப்பதற்கு அந்த நாட்டின் அரசாங்கம் தடை

Saturday, 16 January 2021 - 8:21

%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88
வெளிநாடுகளிலிருந்து பயணிகள் பிரித்தானியாவுக்குள் பிரவேசிப்பதற்கு அந்த நாட்டின் அரசாங்கம் தடை விதித்துள்ளது.

உருமாறிய கொரோனா வைரஸ் தாக்கம் குறித்த அச்சுறுத்தல் அதிகரித்துள்ள நிலையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது

நாளை மறுதினம் முதல் அமுலாகும் இந்த உத்தரவானது எதிர்வரும் பெப்ரவரி மாதம் 15ஆம் திகதி வரையில் அமுலில் இருக்கும் என அந்த நாட்டின் பிரதமர் போரிஸ் ஜொன்சன் அறிவித்துள்ளார்

பிரித்தானியாவில் உருமாறிய கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரிக்கும் நிலையில் புதிய நோயாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

கடந்த 28 நாட்களில் ஆயிரத்து 284 க்கும் அதிகமானவர்கள் அங்கும் உயிரிழந்ததுடன், மொத்தமாக 87 ஆயிரத்து 291 கொவிட் மரணங்கள் பிரித்தானியாவில் பதிவாகியுள்ளன.

அதே நேரத்தில் நேற்றைய தினம் மாத்திரம் அங்கு 55 ஆயிரத்து 761 பேர் வரையில் கொவிட் நோயினால் பீடிக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது

இந்த நிலையில் யாரேனும் வெளிநாடுகளிலிருந்து பிரித்தானியாவுக்குள் பிரவேசிப்பதற்கு அவர்கள் நோய்தொற்றுக்கு ஆளாகவில்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என பிரதமர் பொரிஸ் ஜோன்சன் அறிவித்துள்ளார்