கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் ஒருவர் பலி...!

Saturday, 16 January 2021 - 20:58

%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF...%21
நாட்டில் கொவிட்-19 தொற்றினால் மேலும் ஒரு மரணம் இன்று பதிவாகியுள்ளது.

இதன்படி, கொவிட்-19 தொற்றினால் மரணித்திவர்களின் எண்ணிக்கை 256 ஆக அதிகரித்துள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன். அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எத்துல்கோட்டே பகுதியை சேர்ந்த 82 வயதான பெண் ஒருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தொற்றுறுதியானதை அடுத்து, ஐ.டி.எச் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில், இன்று மரணித்தாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொவிட்-19 தொற்றுடன் அதிகரித்த மாரடைப்பே அவரின் மரணத்திற்கு காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது..

அதேபோல் , சற்று முன்னர் மேலும் 372 கொரோனா தொற்றாளர்கள் அமையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.