ஒளடத பாணியை பருகியிருந்தால் ஒருவருக்கும் கொவிட்-19 தொற்று ஏற்படாது - தம்மிக்க பண்டார

Wednesday, 20 January 2021 - 7:40

%E0%AE%92%E0%AE%B3%E0%AE%9F%E0%AE%A4+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D-19+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81+-+%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0
தாம் கூறியவாறு ஒளடத பாணியை பருகியிருந்தால், ஒருவருக்கும் கொவிட்-19 தொற்று ஏற்படாது என கேகாலையைச் சேர்ந்த தம்மிக்க பண்டார தெரிவித்துள்ளார்.

கேகாலையைச் சேர்ந்த தம்மிக்க பண்டார என்பவரினால் கொரோனா வைரஸுக்கு எதிராக தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் ஒளடத பாணியை பருகிய சில நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றுறுதியாகியுள்ளது.

இது தொடர்பில் எமது செய்திச் சேவை தம்மிக பண்டாரவிடம் வினவியபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

எவ்வாறிருப்பினும், தம்மிக்க பண்டார கூறியவாறு, அனைத்து முறைகளையும் பின்பற்றி பாணியை பருகிய தாம் உள்ளிட்ட தமது குடும்பத்தைச் சேர்ந்த அனைவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக கேகாலை பிரதேச சபையின் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் பிரதிநிதியான சிலந்த விஜேபால எமது செய்திச்சேவையிடம் தெரிவித்தார்.

இதேநேரம் தம்மிக்க பண்டாரவினால் தயாரிக்கப்பட்டுள்ள ஒளடத பாணியை பருகியவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளமை தொடர்பில் அரச ஆயுர்வேத மருத்துவ அதிகாரிகள் சங்கம் கருத்து தெரிவித்துள்ளது.

மருத்துவர் அல்லாத ஒருவர் இவ்வாறான கருத்துக்களை வெளியிடும்போது, பொதுமக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டும் என அந்த சங்கத்தின் தலைவர் மருத்துவர் பி. ஹேவா கமகே தெரிவித்துள்ளார்.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips