வேளாண் சட்டங்களை திரும்பப் பெற முடியாது எனவும் தேவைப்பட்டால் அதனை 2 ஆண்டுகள் நிறுத்திவைக்க தயாராக உள்ளதாக இந்திய மத்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி டெல்லி எல்லையில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், விவசாயிகளுக்கும், இந்திய மத்திய அரசாங்கத்திற்கும் இடையே நேற்றைய தினம் 10 ஆவது சுற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இதன்போது வேளாண் சட்டங்களை திரும்பப் பெற முடியாது என்றும், தேவைப்பட்டால் உச்சநீதிமன்றத்தில் முறையிடுமாறு இந்திய மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
போலியான வழக்குகளை இந்திய தேசிய புலனாய்வு முகாமை பதிவுசெய்து, விவசாயிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை விசாரணைக்கு அழைப்பதாக விவசாயிகள் குற்றம்சாட்டினர்.
குற்றம்செய்யாதவர்கள் யாரும் தண்டிக்கப்பட மாட்டார்கள் என்று பியூஷ் கோயல் இதற்கு விளக்கம் அளித்தார்.
இதனைத் தொடர்ந்து, பேச்சுவார்த்தை எந்தவொரு முடிவும் எட்டப்படாமல் நிறைவடைந்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.