ரஷ்யாவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களில் மூவாயிரத்துக்கும் மேற்பட்டோர் தடுத்து வைக்கப்பட்டனர்

Sunday, 24 January 2021 - 8:56

%E0%AE%B0%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%88%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D
ரஷ்யாவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களில் மூவாயிரத்துக்கும் மேற்பட்டோர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அந்த நாட்டு எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவால்னியின் ஆதரவாளர்களால் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

கடந்த வருடம் மொஸ்கோவுக்கு விமானத்தில் பயணித்த போது அவர் மயங்கி விழுந்ததோடு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர்; கோமா நிலைக்கு சென்றார்.

அவரை கொலை செய்வதற்காக அவர் அருந்திய தேநீரில் விஷம் கலந்திருக்கலாம் என்று அவரது ஆதரவாளர்கள் குற்றம் சாட்டினர்.

இந்தநிலையில் ரஷ்யாவில் அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டால் உயிருக்குப் பாதுகாப்பு இல்லை என்று ஜெர்மனிக்கு அழைத்துச் செல்லப்பட்டு தலைநகர் பெர்லினில் உள்ள வைத்தியசாலையில்; சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதனையடுத்து அண்மையில் நாடு திரும்பிய அவர் தடுத்து வைக்கப்பட்டார்.

அவர் விடுத்த அழைப்பிணங்க தற்போது ரஷ்யாவில் ஆர்ப்பாட்டங்கள் வலுப்பெற்றுள்ளதோடு காவல்துறையினருக்கும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.