ஐக்கிய இராச்சியத்தின் பிரதமருக்கும், அமரிக்காவின் புதிய ஜனாதிபதிக்கும் நடைபெற்ற முதல் கலந்துரையாடல்...!

Sunday, 24 January 2021 - 10:47

%E0%AE%90%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%2C+%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%B2%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D...%21
ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர் பொரிஸ் ஜொன்சன், அமரிக்காவின் புதிய ஜனாதிபதியான ஜோ பைடனுடன் தொலைபேசி மூலமான கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் பதவியேற்ற பின்னர் இரு தலைவர்களுக்கும் இடையிலான முதல் கலந்துரையாடல் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

அதன் போது இரு நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து பேசப்பட்டுள்ளதாக ஐக்கிய இராச்சிய பிரதமரின் அலுவலகத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், உலகளாவிய காலநிலை மாற்றத்தைத் தணிப்பதற்கான நடவடிக்கைகள் குறித்தும் அவர்கள் உரையாடியுள்ளனர்.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கும் முக்கிய இராச்சியத்தின் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையின் போது, ​​இரு நாடுகளுக்கிடையிலான புதிய சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் கைச்சாத்திடுவது குறித்த கருத்துக்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.