தமிழகத்தில் நேற்றைய தினம் 569 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதி!

Monday, 25 January 2021 - 10:02

%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D+569+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D-19+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%21
தமிழகத்தில் நேற்றைய தினம் 569 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

இதன்படி, தமிழகத்தில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 8 இலட்சத்து 34 ஆயிரத்து 740 ஆக அதிகரித்துள்ளதாக தமிழக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

நேற்றைய தினம் 642 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.

இதற்கமைய, குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8 இலட்சத்து 17 ஆயிரத்து 520 ஆக அதிகரித்துள்ளது.

நேற்றைய தினம் 7 மரணங்கள் பதிவான நிலையில், தமிழகத்தில் பதிவான கொவிட்-19 மரணங்களின் மொத்த எண்ணிக்கை 12 ஆயிரத்து 316 ஆக உயர்வடைந்துள்ளது.

4 ஆயிரத்து 904 பேர் வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.