சீ.வி.விக்னேஸ்வரனை சாடும் அனந்தி சசிதரன்...!

Monday, 25 January 2021 - 19:15

+%E0%AE%9A%E0%AF%80.%E0%AE%B5%E0%AE%BF.%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%88+%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%9A%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D...%21
தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் சமுக அமைப்புகளால், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் அங்கத்துவ நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தில், தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் அங்கத்துவ கட்சிகளின் தலைவர்களுக்கு கைச்சாத்திட அனுமதிக்கப்படாமைக்கு ஈழத் தமிழர் சுயாட்சி கழகத்தின் செயலாளர் அனந்தி சசிதரன் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கு, அனந்தி சசிதரன் கடிதம் ஒன்றையும் அனுப்பி வைத்துள்ளார்.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் அங்கத்துவ நாடுகளுக்கு தமிழ் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புகளின் இணக்கப்பாட்டுடன் அனுப்பிவைக்கப்பட்ட கடிதத்தில், சீ.வி.விக்னேஸ்வரன் கைச்சாத்திட்டுள்ள போதும், அவர் தலைமையிலான தமிழ் மக்கள் தேசிய கூட்டணியில் அங்கம் வகிக்கின்ற ஏனைய கட்சிகளின் தலைவர்களது கையொப்பம் அதில் இருக்கவில்லை.

விக்னேஸ்வரன் இவ்வாறு நடந்துக் கொண்டமையை ஏற்றுக் கொள்ள முடியாது என்று அனந்தி சசிதரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், தமிழர் விடயத்தில் முக்கியமான தீர்மானங்கள் மேற்கொள்ளப்படும் போது, அதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டவர்களது பங்களிப்பை புறந்தள்ளுவது முறையானது அல்ல என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் ஆலோசனைக்கு அமைய, கூட்டணிகளின் தலைவர்களது கையெழுத்து மாத்திரம் போதுமானது என்று தீர்மானிக்கப்பட்டதாக, தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இந்த விடயத்துக்கு விளக்கமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips