பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் கட்டமைப்பை மீளாய்வு செய்ய வேண்டும் – ஹனா சிங்கர்...!

Monday, 25 January 2021 - 20:06

%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4+%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF+%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E2%80%93+%E0%AE%B9%E0%AE%A9%E0%AE%BE+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D...%21
பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களுக்கு நியாயமான நீதி விசாரணைகளையும், முறையான செயற்பாடுகளையும் வழங்குமாறு ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான நிரந்தர வதிவிடப் பிரதிநிதி ஹனா சிங்கர் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத முறியடிப்புக்கான செயற்திறன் விருத்தி வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போது அவர் இதனைக் கூறியுள்ளார்.

சீரான மனித உரிமை கலாசாரத்தை உருவாக்குவதன் ஊடாக பயங்கரவாத போக்கினை கட்டுப்படுத்த முடியும்.

இலங்கையில் பயங்கரவாத சட்ட கட்டமைப்பில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டியுள்ளது.

பயங்கரவாத முறியடிப்பு நடவடிக்கைகளின் ஊடாக மனித உரிமைகள் மீறப்படுதல் ஆகாது.

சட்டத்தின் விதிகளையும், மனித உரிமைகளையும் மதித்து நடக்கின்ற போது மாத்திரமே பயங்கரவாத முறியடிப்பு நடவடிக்கைகளை சமாதானமானதாகவும், பொறுப்புடையதாகவும், சட்டரீதியானதாகவும் முன்னெடுக்க முடியும்.

இந்த நிலையில் கடந்த காலங்களில் இந்த நடவடிக்கை ஊடாக இடம்பெற்ற சட்ட மீறல்கள் தொடர்பாக அதிகாரிகள் அவதானம் செலுத்த வேண்டும்.

அத்துடன் பயங்கரவாத தடைசட்டத்தின் கீழ் குற்றம் சுமத்தப்பட்டுள்ளவர்களுக்கு நியாயமான வழக்கு விசாரணைகளை நடத்தி, தீர்வினை வழங்க வேண்டும் என்றும் ஹனா சிங்கர் தெரிவித்துள்ளார்.




Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips