ரஷ்யாவின் ஸ்புட்னிக்-5 கொவிட் தடுப்பூசியை பயன்படுத்த ஈரான் அனுமதி...!

Tuesday, 26 January 2021 - 22:35

%E0%AE%B0%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-5+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%88%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF...%21
ரஷ்யாவினால் தயாரிக்கப்பட்டுள்ள ஸ்புட்னிக்-5 கொவிட் தடுப்பூசியை பயன்படுத்துவதற்கு ஈரான் அனுமதியளித்துள்ளது.

ஈரான் வெளிவிவகார அமைச்சர் மொஹமட் ஜவாட் ஷாரிப் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் அவருக்கும் ரஷ்யாவின் வெளிவிவகார அமைச்சர் சேர்ஜீ லவ்ரோவிற்கும் இடையில் பேச்சுவார்த்தை ஒன்றும் இடம்பெற்றுள்ளது.

ஈரானின் உயரிய தலைவர் அயோதுல்லா அலி கான், பிரித்தானியாவிலும் அமெரிக்காவிலும் தயாரிக்கப்பட்ட கொவிட்19 தடுப்பூசிகளுக்கு தடைவிதித்துள்ளார்.

குறித்த தடுப்பூசிகள் நம்பகத்தன்மை அற்றவை என்று அவர் கூறியுள்ளார்.

இந்தநிலையில், ரஷ்யா, சீனா மற்றும் இந்தியாவில் தயாரிக்கப்படும் தடுப்பூசிகளை மாத்திரமே ஈரான் பயன்படுத்தும் என்று தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் உள்நாட்டில் கொவிட் தடுப்பூசியை தயாரிப்பதற்கான நடவடிக்கைகளையும் ஈரான் மேற்கொள்ளவுள்ளது.

அதேநேரம் ரஷ்யாவின் தடுப்பூசியை ஈரான் அங்கீகரித்தமையானது, ரஷ்யாவிற்கு கிடைத்த பூகோள அரசியல் வெற்றி என்றும் கருதப்படுகிறது.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips