இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்ணாண்டோவுக்கு கொவிட்-19 தொற்றுறுதி..!

Wednesday, 27 January 2021 - 11:04

%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D-19+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF..%21
இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்ணாண்டோவுக்கும் கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது

தமக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியிருப்பதாக அவர் எமது செய்தி சேவைக்கு உறுதிப்படுத்தினார்.

தனியார் வைத்தியசாலை ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் தனக்கு கொவிட்-19 தொற்றுறுதியானதாக அவர் தெரிவித்தார்.

கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் கண்டி, நுவரெலியா மாவட்டங்களில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சம்மேளனத்தில் அவர் பங்குபற்றியுள்ளார்.

அத்துடன். நேற்றைய தினமும் அமைச்சின் செயற்பாடுகளில் பங்கேற்றிருந்ததாக இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்ணான்டோ குறிப்பிட்டுள்ளார்.

எனவே, தம்முடன் தொடர்பை பேணியவர்களை, சுகாதார நடைமுறைகளை பின்பற்றுமாறும் அவர் கோரியுள்ளார்.

ஏற்கனவே, அமைச்சர்களான பவித்ரா வன்னியாராச்சி, வாசுதேவ நாணயக்கார ஆகியோருக்கும், இராஜாங்க அமைச்சர்களான தயாசிறி ஜயசேகர மற்றும் பியால் நிஷாந்த ஆகியோருக்கும் கொவிட்-19 தொற்றுறுதியானது.

அத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர்களான ரவூப் ஹக்கீம் மற்றும் வசந்த யாப்பா பண்டார ஆகியோருக்கும் கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

அவர்களில் தயாசிறி ஜயசேகர, வாசுதேவ நாணயக்கார மற்றும் ரவூப் ஹக்கீம் ஆகியோர் குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips