மகாராஷ்டிரா மற்றும் கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் கொவிட்-19 நோயாளர் எண்ணிக்கை அதிகரிப்பு

Monday, 22 February 2021 - 20:10

%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE+%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%BE+%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D-19+%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+
மகாராஷ்டிரா மற்றும் கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் கொவிட்-19 நோயாளர் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றமை காரணமாக இந்தியாவில் நோயாளர் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 150,000ஐ அதிகரித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்தியாவில் கொரோனா வைரஸின் 240 புதிய உபகூறுகள் கண்டறியப்பட்டுள்ளதாக அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவகம் தகவல் வெளியிட்டுள்ளது.

அண்மைக் காலமாக நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கின்றமைக்கு இது காரணமாக இருக்கலாம் என்றும் அந்த நிறுவகம் தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

குறிப்பாக மஹாராஸ்டிரா மாநிலத்தில் இந்த புதிய உபகூறு பரவுவதுடன், கேரளா, மத்திய பிரதேசம், சண்டிகார் மற்றும் பஞ்சாப் முதலான மாநிலங்களிலும் இந்த நிலைமையை அவதானிக்கக்கூடிதாக உள்ளதெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips