அமெரிக்க ஜனாதிபதிக்கும் கனேடிய பிரதமர் இடையிலான கலந்துரையாடல்

Wednesday, 24 February 2021 - 14:42

%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%A9%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%95%E0%AE%B2%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கும், கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோவுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இரு நாடுகளின் தலைவர்களும் காலநிலை மாற்றம் உள்ளிட்ட முக்கிய விடயம் தொடர்பில் கலந்துரையாடியதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

எதிர்வரும் 2050 ஆம் ஆண்டாகும் போது, உலக காலநிலை மாற்றத்திற்கமைய, காபன் வெளியேற்ற அளவை பூஜ்ஜியமாக பேணுவற்கு இருநாடுகளும் உறுதிப்பூண்டுள்ளன.

அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவியேற்ற பின்னர், முதலாவது வெளிநாட்டு விஜயமாக கனடாவுக்கு பயணிக்கவிருந்த நிலையில், கொவிட்-19 பரவல் காரணமாக அந்த விஜயம் ரத்து செய்யப்பட்டது.

இந்தநிலையில் தொலைகாணொளி ஊடாக இருநாட்டு தலைவர்களும் கலந்துரையாடியுள்ளனர்.






Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips