மின்வேலியில் சிக்கி தந்தை - மகன் பலி

Friday, 26 February 2021 - 16:31

%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF+%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88+-+%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF+
தமிழகத்தில் அரக்கோணம் பகுதியில் மின்வேலியில் சிக்கிய மகனும், அவரை காப்பற்ற முயன்ற தந்தையும் உயிரிழந்துள்ளனர்.

அரக்கோணம் - கோணலம் பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் மின்வேலியில் சிக்கி இருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினருக்கு தகவல்கிடைத்துள்ளது.

சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்தவர்கள் திருவள்ளூர் மாவட்டம் ராமலிங்கபுரம் பகுதியை சேர்ந்த பாக்கியராஜ்(37), அவரது மகன் அருண்குமார்(13) ஆகியோர் எனவும் இவர்கள் அங்குள்ள ஒரு விவசாய நிலத்தில் எலிதொல்லைக்காக அமைத்திருந்த மின்வேலியில் சிக்கி உயிரிழந்துள்ளனர் என்றும் விசாரணையின்போது தெரியவந்துள்ளது.

Exclusive Clips