இந்தியா- சீனா அவசர தொடர்பாடல் சேவை ஒன்றை ஏற்படுத்திக் கொள்ள இணங்கியுள்ளன

Friday, 26 February 2021 - 20:01

%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-++%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE+%E0%AE%85%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%B0+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88+%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88+%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%87%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A9
இந்திய மற்றும் சீனாவின் வெளிவிவகார அமைச்சுக்களுக்கு இடையிலான அவசர தொடர்பாடல் சேவை ஒன்றை ஏற்படுத்திக் கொள்ள இணங்கப்பட்டுள்ளது.

இரண்டு நாடுகளுக்கும் இடையிலான ஹிமாச்சல் பிரதேச எல்லையில் நிலவும் பதற்றத்தை தணித்துக் கொள்வதற்கு இரண்டு தரப்பும் அவதானம் செலுத்தியுள்ளன.

இதன் ஒரு கட்டமாக இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சீன மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர்களுக்கு இடையிலான தொலைபேசிவழி பேச்சுவார்த்தை ஒன்று நேற்று இடம்பெற்றிருந்தது.

இதன்போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக இந்திய வெளிவிவகார அமைச்சின் அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exclusive Clips