நைஜீரியாவில் 300 பள்ளி மாணவிகள் கடத்தப்பட்டனர்

Saturday, 27 February 2021 - 9:34

%E0%AE%A8%E0%AF%88%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+300+%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D
வடமேற்கு நைஜீரியாவின் சம்ஃபாரா  எனும் பகுதியில் ஒரு உறைவிடப் பள்ளியில் 300 க்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகள் துப்பாக்கிதாரிகளால் கடத்தப்பட்டுள்ளனர்.

நேற்று காலை சிற்றூர்ந்துகள் மற்றும் உந்துருளிகளில் வந்த ஆயுதக் குழுக்களால் சிறுமிகள் அழுதுகொண்டிருந்த நிலையில்  கடத்தப்பட்டனர்.

100 க்கும் மேற்பட்ட ஆயுதமேந்தியவர்கள் பள்ளியின் தங்குமிடத்திற்குள் நுழைந்ததாக நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

கடத்தப்பட்ட மாணவிகளைத் தேடி அவர்களது பெற்றோர்கள் சிலர் அருகிலுள்ள காடுகளுக்குச் சென்றுள்ளதோடு நைஜீரிய பாதுகாப்புப் படையினர் இது தொடர்பில் மேலதிக நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

Exclusive Clips