காணாமல் போன மேலும் 6 பெண்கள் தொடர்பில் டேம் வீதி காவல் நிலையத்திற்கு தகவல் (காணொளி)

Thursday, 04 March 2021 - 9:04

%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9+%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+6+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9F%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D+%28%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF%29
டேம் வீதியில் பயணப் பொதியொன்றிலிருந்து தலையில்லாமல் மீட்கப்பட்ட பெண்ணின் உடலை அடையாளம் காண்பதற்காக, உயிரிழந்த பெண்ணின் விபரங்களை வழங்குமாறு காவல்துறை கோரியிருந்தது.

அது தொடர்பான தகவல்களைத் திரட்டும் பொருட்டு டேம் வீதி காவல் துறையினரால் தொலைபேசி இலக்கமொன்று பொது மக்களுக்காக வழங்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து காணாமல் போன மேலும் 6 பெண்கள் தொடர்பான தகவல்கள் கொழும்பு டேம் வீதி காவல் நிலையத்திற்கு தொலைபேசி அழைப்புகள் மூலம் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்படி செய்தி பத்திரிகையொன்றில் வெளியாகியுள்ளதாக ஹிரு தொலைக்காட்சியில் இன்று காலை ஒளிபரப்பாகிய “பத்தரே விஸ்தரே” பத்திரிகைக் கண்ணோட்ட நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்டது.






Exclusive Clips