கிளிநொச்சி - வட்டக்கச்சி பிரதேசத்தில் தமது மூன்று பிள்ளைகளுடன் தாய் ஒருவர் கிணற்றுக்குள் குதித்திருந்த நிலையில், காணாமல் போயிருந்த இரண்டு பிள்ளைகளும் உயிரிழந்ததாக எமது செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.
இந்தநிலையில் நீதிமன்ற அனுமதியுடன் இன்றைய தினம் சடலங்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
தனது மூன்று பிள்ளைகளுடன் தாய் ஒருவர் நேற்று பிற்பகல் கிணற்றில் குதித்திருந்தார்.
பின்னர் அவர், உயிருடன் மீட்கப்பட்டிருந்த நிலையில் ஒரு பிள்ளை சடலமாக மீட்கப்பட்டிருந்தது.
பின்னர் காணாமல் போயிருந்த மற்றைய இரு பிள்ளைகளும் தேடப்பட்டு வந்தநிலையில் இன்று முற்பகல் அவர்களின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
சம்பவத்தில் 2, 5 மற்றும் 8 வயதுகளை உடைய பிள்ளைகளே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
காப்பாற்றப்பட்ட தாய் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.