17 வயது மகளை தலை துண்டித்துக் கொலை செய்த தந்தை! (காணொளி)

Thursday, 04 March 2021 - 18:20

17+%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%21+%28%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF%29
தனது 17 வயதான மகளின் தலையை தந்தையே வெட்டிக்கொலை செய்த சம்பவம் ஒன்று இந்தியாவின் உத்தரபிரதேசத்தில் பதிவாகியுள்ளது.

இந்த பகுதியை சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு தனது மகளின் தலையை வெட்டிக்கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தனது மகளின் தலையை வெட்டியது மட்டுமன்றி தலையை எடுத்துச்சென்ற சந்தேக நபர் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

தனது மகளுக்கு பிரிதொரு நபருடன் தொடர்பு இருந்ததாகவும் இதனை அறிந்துக்கொண்டதன் பின்னர் ஆத்திரத்தில் மகளை கழுத்தறுத்து கொலை செய்ததாகவும் சந்தேக நபர் காவல்துறையிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

அத்துடன் தனது மகளின் சடலம் வீட்டில் இருப்பதாக தெரிவித்த அவர் தனக்கு நீதித்துறை எந்தவொரு தண்டனை கொடுத்தாலும் ஏற்றுக்கொள்ள தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்தில் மகளின் தலையை கைப்பற்றும்போது முறையாக செயல்படாத காவல்துறை அதிகாரி ஒருவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.Exclusive Clips