ஆப்கான் பனிச்சரிவில் சிக்கி 14 பேர் பலி!

Friday, 05 March 2021 - 10:15

%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF+14+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF%21

ஆப்கானிஸ்தானின் பதக்ஷான் மாகாணத்தில் கொஹிஸ்தான் பகுதியில் ஏற்பட்ட பாரிய பனிச்சரிவில் 14 பேர் உயிரிழந்துள்ளனர்.

இப்பனிச்சரிவில் சிக்கியிருந்த 14 பேரும் பின்னர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தினால் மேலும்3 பேர் காயமடைந்துள்ளனர்.

இதனை ஆப்கான் அரசின் உள்ளூர் செய்தி தொடர்பு அதிகாரி நிக் முகமது நஜாரி உறுதிப்படுத்தியுள்ளார்.

அண்மைய நாட்களில் பதக்ஷான் பகுதியில் பனிப்பொழிவுகள் அதிகரித்து காணப்படுகின்றன. 

மலைப்பிரதேசத்தில் மாவட்ட சாலை ஒன்றில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

இதையடுத்துசம்பவ பகுதியில் உள்ள மக்களுக்கு தேவையான உதவிகளை செய்வதற்கு மீட்புக்குழுவினரும், காவல்துறையினரும் சம்பவ பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.


Exclusive Clips