தலையின்றி மீட்கப்பட்ட பெண்ணின் மரபணு அறிக்கை ஒரு வாரத்தினுள்!

Friday, 05 March 2021 - 11:19

%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%81+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%21

கொழும்பு டேம் வீதியில் பயணப்பொதியொன்றில் இருந்து தலையில்லாமல் மீட்கப்பட்ட பெண்ணின் மரபணு பரிசோதனைகள் இன்னும் ஒரு வாரத்தில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உயிரிழந்த பெண்ணின் தாய் மற்றும் சகோதரனிடமிருந்து பெறப்பட்ட மரபணு மாதிரிகள் அரச இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களத்துக்கு சோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளன.

உயிரிழந்த பெண்ணின் தலைப்பகுதி இதுவரையில் கண்டுபிடிக்கப்படாதமையினால் இவ்வாறு மரபணு பரிசோதனைகளை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், அதன் அறிக்கை கிடைத்த பின்னரே பிரேத பரிசோதனைகளை முன்னெடுக்கப்படவுள்ளன.

இதேவேளை, உயிரிழந்த காவல்துறை உப பரிசோதகருக்கு கொவிட் 19 பரிசோதனையை மேற்கொண்டதன் பின்னர் பிரேத பரிசோதனைகளை முன்னெடுக்க ஆயத்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


Exclusive Clips