காவல்துறை பரிசோதகர் பெண்ணுடன் கொண்டிருந்த தொடர்பை முன்கூட்டியே அறிந்திருந்த மனைவி!

Friday, 05 March 2021 - 13:53

%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88+%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%21
பெண் ஒருவரை கொலை செய்த பின்னர் தற்கொலை செய்து கொண்ட காவல்துறை உப பரிசோதகர் தொடர்பில் காவல்துறையினர் தொடர்ந்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொழும்பு டேம் வீதியில் பயணப் பொதி ஒன்றில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட கொலைசெய்யப்பட்ட பெண்ணின் தலையை தேடும் நோக்கில்  காவல்துறையினரால் களனி கங்கையின் இரு பக்கங்களிலும் விசேட தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

கரையோர காவல்துறை பிரிவு அதிகாரிகளினால் நேற்று மதியம், முகத்துவாரம் முதல் ஹங்வெல்ல வரையான களனி கங்கையின் இரு கரைகளிலும் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதேவேளை, தற்கொலை செய்து கொண்ட உப காவல்துறை பரிசோதகரின் மூத்த சகோதரி, முறையற்ற தொடர்பு காரணமாக கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர் தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த காவல்துறை பரிசோதகர் தற்கொலை செய்து கொண்ட இடத்திலேயே, அவரும் தற்கொலை செய்து கொண்டிருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.

அதேபோல், காவல்துறை பரிசோதகர் பயணித்த சில இடங்கள் சீ.சீ.டீ.வியில் பதிவாகியுள்ளதாக காவல்துறை ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.

சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் தலையை தேடும் பணிகள் தொடரும் நிலையில்,சந்தேக நபர் பயணித்த இடங்கள் தொடர்பிலும் ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

காவல்துறை உப பரிசோதகரால் கொலை செய்யப்பட்டதாக கருதப்படும் குறித்த பெண் அக்காவல்துறை அதிகாரியின்  வீட்டிற்கு சில சந்தர்ப்பங்களில் சென்றுள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது.

இப்பெண் தொடர்பில் குறித்த காவல்துறை உப பரிசோதகரின் மனைவி அறிந்திருந்ததாகவும் விசாரணைகளை மேற்கொள்ளும் காவல்துறை அதிகாரி ஒருவர் எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.

Exclusive Clips