தன்னை தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு வேறு இருவர் மீது குற்றம் சுமத்தியவருக்கு எதிராக வழக்கு!

Friday, 05 March 2021 - 17:55

%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%87+%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%21

தற்செயலாக தன்னைத் தானே துப்பாக்கியால் முழங்காலில் சுட்டுக்கொண்ட நபரொருவர், உந்துருளியில் வந்த இருவர் தன்மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாக பொய்யான குற்றச்சாட்டொன்றை முன்வைத்துள்ளார்.

இந்தியாவின், டெல்லியைச் சேர்ந்த 30 வயதான இந்த நபர் சாரதியாக பணியாற்றிவருவதுடன், 10 வயதான தனது மகன் மற்றும் மனைவி ஆகியோருடன் வசித்துவருகிறார்.

தனது வீட்டுக்கு அருகிலுள்ள பூங்காவுக்கு அருகில் புகைப்பிடித்துக் கொண்டிருந்தபோது, உந்துருளியில் வந்த இருவர் தன்னுடன் தகராறில் ஈடுபட்டதுடன், தன்னுடைய இடது காலில் துப்பாக்கிப் பிரயோகம் நடத்திவிட்டு தப்பிச்சென்றதாக அந்நபர் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளதாக டெல்லி காவல்துறையினர்.

தெரிவித்துள்ளனர். எனினும், விசாரணையின்போது, குறித்த நபர் முன்னுக்குபின் முரணான கருத்துகளை கூறியதால் காவல்துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

அதன்பின்னர், இந்நபர் கூறிய இடத்தில் எவ்வித துப்பாக்கி சூட்டுசம்பவங்களும் இடம்பெறவில்லை என காவல்துறையினர் சாட்சியங்களின் ஊடாக கண்டறிந்தனர்.

அதன்பின்னர், அந்நபரிடம் மீண்டும் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்தபோது, 15 நாட்களுக்கு முன்னர் அயல்வீட்டு இளைஞர்கள் இருவருடன் அவர் தகராறில் ஈடுபட்டுள்ளார். அதன்போது, அந்த இளைஞர்களை நோக்கி துப்பாக்கியை காட்டி அச்சுறுத்தியுள்ளார்.

பின்னர் வீட்டில் இருந்தபோது தவறுதலாக துப்பாக்கி இயங்கியதால் அவரது காலில் காயம் ஏற்பட்டுள்ளதாக விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, உறவினர் ஒருவரின் உந்துருளியில் மறைத்துவைக்கப்பட்டிருந்த நிலையில் துப்பாக்கியை மீட்ட காவல்துறையினர், பொய் குற்றச்சாட்டை முன்வைத்த சந்தேகநபருக்கு எதிராக துப்பாக்கிக் கட்டளைச் சட்டத்தின் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.

அத்துடன், இச்சந்தேகநபர் மேலும் பல குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடையவர் என்றும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


Exclusive Clips