புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்த இந்தியா

Friday, 05 March 2021 - 21:51

%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%8F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE
புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக சோதனை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம், இராணுவத்திற்கு தேவையான ஏவுகணை உள்ளிட்ட தளபாடங்களை மேம்படுத்தி வருகிறது.

அந்த வகையில், ரஷ்யாவுடன் இணைந்து திட எரிபொருள் குழாய் உடைய ராம்ஜெட் உந்துவிசை தொழில்நுட்பத்தை மேம்படுத்தி உள்ளதுடன், ஏவகணையையும் சோதனை செய்துவருகிறது.

இந்நிலையில், புதிய எஸ்.எப்.டி.ஆர் தொழில்நுட்பத்துடன் கூடிய ஏவுகணையானது, ஒடிசா மாநிலம் சந்திப்பூரில் இன்று மீண்டும் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

திட எரிபொருள் குழாய் உடைய ராம்ஜெட் உந்துவிசை தொழில்நுட்பம் உள்ளிட்ட பல புதிய தொழில்நுட்பங்கள் இன்றைய சோதனையில் நிரூபிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips