டேம் வீதியில் சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் தலை தொடர்பில் வெளிவந்த புதிய தகவல்

Monday, 08 March 2021 - 13:59

%E0%AE%9F%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D
கொழும்பு, டேம் வீதியில் பயணப் பொதியில் இருந்து சடலமாக கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் தலை கொலையாளியால் எரிக்கப்பட்டிருக்கலாமென சந்தேகிப்பதாக காவல்துறை உயர் அதிகாரியொருவர் எமது செய்திப் பிரிவிடம் தெரிவித்தார்.

இப்பெண்ணின் தலையை தேடும் பொருட்டு கொழும்பு மற்றும் மொனராகலையைச் சேர்ந்த இரு விசேட காவல் துறை குழுக்கள் விசாரணை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

இக்கொலையை மேற்கொண்டதாக கருதப்படும் உப காவல்துறை பரிசோதகர் தனது வீட்டிற்குச் சென்ற தினத்தன்று இரவு அவரது அழுக்கான ஆடைகள் குளியலறையில் பேசினில் இருந்ததாகவும் ஆயினும் மறுநாள் காலை அந்த ஆடைகளை காணவில்லை எனவும் அவரது மகளிடம் மேற்கொண்ட விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளது.

நள்ளிரவை நெருங்கிக்கொண்டிருந்த வேளையில் தனது தந்தை வீட்டிற்கு வந்ததாகவும் அதன் பின் இரவு உணவை உட்கொண்டதாகவும் மகளின் சாட்சியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் கொலையை மேற்கொண்ட நபர் அன்றைய தினம் இரவு உணவு உட்கொண்டதன் பின் எவருக்கும் தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறி இருப்பாரெனவும் அதன் பின் அவரது மகன் நிர்மாணித்துக் கொண்டிருக்கும் வீட்டிற்குச் சென்று அவரது அழுக்கு உடை மற்றும் கொலை செய்த பெண்ணின் தலை ஆகியவற்றை எரித்திருக்கலாமென சந்தேகிப்பதாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் காவல் துறை குழு தெரிவித்துள்ளது.

தற்போது அழுக்கான ஆடைகள் மற்றும் பயணப் பொதி எரிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இடத்தை கண்டுபிடித்துள்ளதோடு தலையைத் தேடி மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக காவல் துறை எமது செய்திப் பிரிவிற்கு தெரிவித்துள்ளது.

Exclusive Clips