மேல் மாகாணத்தில் எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் 5ஆம் தரம், கல்வி பொதுத் தராதர சாதாரண தர மற்றும் உயர்தர மாணவர்களுக்காக பாடசாலைகளை மீள ஆரம்பிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்னவால் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
முதலாம் தவணைக்காக திட்டமிட்டப்படி மேல் மாகாணம் தவிர்ந்த நாட்டின் ஏனைய அனைத்து மாகாணங்களுக்கும் உட்பட்ட பாடசாலைகளையும் எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கவுள்ளதாக கல்வியமைச்சர் ஜி.எல் பீரிஸ் இன்று தெரிவித்திருந்தார்.
அத்துடன் மேல் மாகாணத்திற்கு உட்டபட்ட பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கான பரிந்துரைகள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திடம் முன்வைக்கப்பட்டிருந்தது.
எனவே அது குறித்த அனுமதியை எதிர்பார்த்துள்ளதாகவும் கல்வியமைச்சர் குறிப்பிட்டிருந்தார்.
இந்தநிலையில் மேல் மாகாணத்தில் எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் 5ஆம் தரம், கல்வி பொதுத் தராதர சாதாரண தர மற்றும் உயர்தர மாணவர்களுக்காக பாடசாலைகளை மீள ஆரம்பிக்க சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.