வட மாகாணம் உள்ளிட்ட நாட்டின் சில பகுதிகளில் மின்சாரத் தடை

Monday, 08 March 2021 - 20:17

%E0%AE%B5%E0%AE%9F+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2+%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88
வட மாகாணம் உள்ளிட்ட நாட்டின் சில பகுதிகளில் மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளது.

அநுராதபுரம் புதிய நகரில் உள்ள கிரிப் (Grip) மின் உபநிலையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன தெரிவித்தார்.

இதன் காரணமாக வட மாகாணத்திற்கு மேலதிகமாக  வாழைச்சேனை, ஹபரனை மற்றும் பொலன்னறுவை ஆகிய பகுதிகளுக்கு உட்டபட்ட பல பிரதேசங்களிலும் மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த நிலையில் மின்சார விநியோகத்தை வழமைக்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

Exclusive Clips