பிரித்தானிய அரச குடும்பத்தின் நடவடிக்கைகளால் உயிரை மாய்த்துக் கொள்ள நினைத்த மெஹான் மேர்கல்

Monday, 08 March 2021 - 22:41

%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A+%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D
பிரித்தானிய அரச குடும்பத்தின் நடவடிக்கைகள் காரணமாக தாம் பெரும் பிரச்சினைகளை எதிர்நோக்கியதாக மெஹான் மேர்கல் தெரிவித்துள்ளார்.

பிரித்தானிய இளவரசர் ஹரியுடன் இணைந்து வழங்கிய இரண்டு மணி நேர செவ்வியின் போது முன்னர் வெளிவராத பல தகவல்களை அவர் வெளியிட்டுள்ளார்.

அரச குடும்பத்தவர்கள் தமக்கு எதிராக மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக தனது உயிரை மாய்த்து கொள்ள வேண்டும் என்ற நிலை ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தமது புதல்வரின் சரும நிறம் குறித்தும் அரச குடும்பத்தை சேர்ந்த ஒருவர் மனிதாபிமானற்ற முறையில் கருத்து தெரிவித்துள்ளதாகவும் அந்த செவ்வியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மெஹான் மேர்கலும் அவரது கணவரான இளவரசர் ஹரியும் பிரித்தானிய அரச குடும்ப அந்தஸ்திலிருந்து வெளியேறியதன் பின்னர் பிரித்தானிய அரச குடும்பத்தவர்கள் தமக்கு பெரும் அசௌரிகயத்தை ஏற்படுத்தினர்.

பொது நிகழ்வில் கலந்து கொண்ட பல சந்தர்ப்பங்களில் ஓரங்கட்டப்பட்டதாக அந்த செவ்வியில் தகவல்களை வெளிப்படுத்தியுள்ளனர்.

அதேவேளை மெஹான் மேர்கலும், இளவரசர் ஹரியும் அரச குடும்பம் மற்றும் பிரித்தானிய அரச சலுகைகள் அனைத்திலும் இருந்து வெளியேறுவதாக அறிவித்து கலிபோர்னியாவில் குடியேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exclusive Clips