டேம் வீதியில் சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் மரபணு பரிசோதனை முடிவு வெளியானது!

Tuesday, 09 March 2021 - 9:25

%E0%AE%9F%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81%21

கொழும்பு டேம் வீதியில் கடந்த முதலாம் திகதி தலையில்லாத நிலையில் மீட்கப்பட்ட சடலம் குறுவிட்ட, தெப்பனாவ பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதான பெண்ணுடையது என மரபணு (DNA) பரிசோதனைகளில் மேலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் தொிவித்துள்ளார்.

சாட்சியங்களின் அடிப்படையில் குறித்த சடலம் யாருடைய எனக் கண்டறிந்த போதிலும் சடலத்தின் தலை துண்டிக்கப்பட்டிருந்தமையினால், மீட்கப்பட்ட அடையாளத்தை முழுமையாக உறுதிப்படுத்துவதற்காக மரபணு பரிசோதனை செய்ய தீர்மானிக்கப்பட்டது.

அதற்கமைய, குறித்த பெண்ணின் தாய் மற்றும் சகோதரனின் மரபணு மாதிரிகள் பெற்றப்பட்டு  பரிசோதனைகளுக்காக அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்துக்கு அனுப்பப்பட்டன.

இந்நிலையில் அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்தின் மேலதிக பகுப்பாய்வாளர் டீ.எச்.எல்.டபிள்யூ. ஜயமான்னவினால் வெளியிடப்பட்டுள்ள பரிசோதனை அறிக்கைக்கு அமைய தாய் மற்றும் சகோதரனின் மரபணு மாதிரிகள் அப்பெண்ணின் மாதிரிகளுடன் ஒத்திசைவாவதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர், பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.


Exclusive Clips