கொல்கத்தா ரயில்வே கட்டட தீ விபத்தில் 9 பேர் பலி!

Tuesday, 09 March 2021 - 10:50

%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE+%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87+%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9F+%E0%AE%A4%E0%AF%80+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+9+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF%21

இந்தியாவின் கொல்கத்தாவிலுள்ள கிழக்கு ரயில்வே அலுவலகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ரயில்வே அதிகாரிகள்இருவர், ஒரு காவல் அதிகாரி உட்பட தீயணைப்பு பணியில் ஈடுபட்ட 4 தீயணைப்பு வீரர்களும் இச்சம்பவத்தில் உயிரிழந்தனர்.

கொல்கத்தா நகரில் ஸ்டிராண்ட் சாலையில் உள்ளரயில்வே கட்டடத்தில் நேற்று (08) இரவுஇந்த தீ விபத்து ஏற்பட்டது.

இதனையடுத்து, தீயணைப்புப்படை வீரர்கள் 8 தீயணைப்புவாகனங்களில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றிருந்தனர்.

அக் கட்டடத்தின் 13ஆவது மாடியில் தீ விபத்து ஏற்பட்டிருந்தது.இந்த தீ விபத்தின்போது தீயணைப்பு பணியில் ஈடுபட்டிருந்த 4 தீயணைப்பு வீரர்கள் உட்பட 9 பேர் சம்பவத்தில் பலியானதுடன் மேலும் பலர் காயமடைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள்  தெரிவித்துள்ளன.

No description available.
No description available.


Exclusive Clips