யேமனுக்கு அருகில் நங்கூரமிடப்பட்டிருந்த ஈரானிய உளவு கப்பல் மீது தாக்குதல்!

Wednesday, 07 April 2021 - 22:28

%E0%AE%AF%E0%AF%87%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%88%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%89%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%81+%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%21
செங்கடலில் யேமனுக்கு அருகில் நங்கூரமிடப்பட்டிருந்த ஈரானிய உளவு கப்பல் ஒன்று தாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அங்கு நடைபெற்ற வெடிப்பு சம்பவம் ஒன்றில் தமது கப்பல் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை ஈரான் உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த கப்பல் ஈரானின் புரட்சி இராணுவத்தினரால் பயன்படுத்தப்பட்டமை தெரியவந்துள்ளது.

எனினும் இது சிவில் கப்பல் என்றும், கடற்கொள்ளையர்களிடம் இருந்து அந்த பிராந்தியத்தை பாதுகாப்பதற்காக இந்த கப்பல் அங்கு நங்கூரமிடப்பட்டிருந்ததாகவும் ஈரானின் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதேநேரம், ஈரானிய கப்பல் ஒன்றை தாக்கி இருப்பதாக இஸ்ரேல் அமெரிக்காவிற்கு அறியப்படுத்தி இருப்பதாக நியுயோர்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டிருக்கிறது.

எனினும் இஸ்ரேல் இன்னும் இதனை உறுதிப்படுத்தவில்லை.


Exclusive Clips