வெளிநாட்டிற்கு தப்பிச்சென்றுள்ள போதைப்பொருள் வர்த்தகரான தர்மசிறி பெரேராவினால் அனுப்பப்பட்ட நிதியை தமது வங்கிக்கணக்கில் வைப்பு செய்த ஒருவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் ரத்மலானை - தர்மாராம பகுதியில் வைத்து இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் பிரதிகாவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
அவரது வங்கிக் கணக்கில் 136 மில்லியன் ரூபா வைப்பிடலிடப்பட்டிருந்ததாக காவல்துறை பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நபர் ஒருவரின் வங்கி கணக்கிற்கு 49 கோடி ரூபா பணம் போதைப்பொருள் வர்த்தகரான தர்மசிறி பெரேராவினால் அனுப்பப்பட்டிருந்தது.
இதனையடுத்து, குறித்த வங்கிக்கணக்கின் உரிமையாளர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த 49 கோடி ரூபாவில் 136 மில்லியன் ரூபா நேற்று கைது செய்யப்பட்ட சந்தேகநபரின் வங்கிக்கணக்கிற்கு மாற்றப்பட்டமை தெரியவந்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக காவல்துறை பேச்சாளர் குறிப்பிட்டார்.