ஹரியானாவில் தீப்பற்றி எரிந்த தொடருந்து: 4 பெட்டிகள் தீக்கிரை!

Thursday, 08 April 2021 - 18:34

%E0%AE%B9%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF+%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%3A+4+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%21+
இந்தியாவின் ஹரியானா மாநிலத்திலுள்ள ரோஹத் தொடருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தொடருந்து ஒன்று எதிர்பாராத விதமாக தீப்பற்றி எரிந்துள்ளது.

இதனையடுத்து, உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்புப் பிரிவினர் தீப்பரவலை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர்.

எனினும், இந்தத் தீப் பரவலால் குறித்த தொடருந்தின் நான்கு பெட்டிகள் எரிந்து நாசமாகின.

எவ்வாறாயினும், மற்ற பெட்டிகளுக்கு தீ பரவாமல் தீயணைப்பு பிரிவினர் தீப்பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். இந்த சம்பவத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Exclusive Clips