இந்தோனேஷியா நிலநடுக்கத்தில் ஏழு பேர் பலி!

Saturday, 10 April 2021 - 21:02

%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%8F%E0%AE%B4%E0%AF%81+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF%21+
இந்தோனேஷியாவின் ஜாவா தீவில் ஏற்பட்ட 6 மெக்னிடியூட் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் ஏழு பேர் உயிரிழந்துள்ளதுடன், 12 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தோனேஷியாவில் கிழக்கு ஜாவாவின் மலாங் நகரிலிருந்து 45 கிலோமீற்றர் தொலைவில் இந்த நிலஅதிர்வு பதிவாகியுள்ளது.

இந்த நிலநடுக்கம் காரணமாக 300க்கும் அதிகமான கட்டடங்கள் சேதமடைந்துள்ளதுடன்,ஆங்காங்கே மண்சரிவுகளும் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், ஆழிப்பேரலை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கவில்லை என அந்நாட்டு ஊடகங்களின் செய்திகள் தெரிவிக்கின்றன.

அனர்த்தங்கள் ஏற்பட்ட பகுதிகளிலுள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

Exclusive Clips