ஸ்புட்னிக் கொரோனா தடுப்பூசியை அவசர தேவைகளுக்கு பயன்படுத்த இந்தியா அனுமதி

Tuesday, 13 April 2021 - 20:36

%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE+%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%85%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%B0+%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE+%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF
ரஷ்யாவின் ஸ்புட்னிக் 5 கொவிட்-19 தடுப்பூசியை அவசர தேவைகளுக்காக பயன்படுத்த இந்தியா அனுமதி வழங்கியுள்ளது.

இதன்படி 3 ஆவது கொவிட்-19 தடுப்பூசிக்கும் இந்தியா அனுமதி வழங்கியுள்ளதாக அந்த நாட்டின் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் கொரோனாவை தடுப்பதற்காக கோவிஷீல்ட், கோவேக்சின் என்ற 2 வகையான தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன.

இந்தியாவில் ஸ்புட்னிக் 5 தடுப்பூசியை உற்பத்தி செய்ய மருத்துவர் ரெட்டி நிறுவனம் அனுமதி பெற்றிருந்தது.

இதற்கமைய அந்த நிறுவனம், ஸ்புட்னிக்-5 தடுப்பூசியை அவசர தேவைகளுக்கு பயன்படுத்த அனுமதிக்குமாறு கோரி இந்திய மத்திய அரசாங்கத்திடம் விண்ணப்பித்திருந்தது.

குறித்த தடுப்பூசி தொடர்பில் மத்திய நிபுணர் குழு கூடி ஆய்வுகளை மேற்கொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் ஸ்புட்னிக்-5 தடுப்பூசியை இந்தியாவில் பயன்படுத்திக்கொள்ளலாம் என அந்த குழு பரிந்துரைத்திருந்தது.

இந்த பரிந்துரைய பரிசீலித்த இந்திய ஒளடத கட்டுப்பாட்டு அமைப்பு, ஸ்புட்னிக்-5 தடுப்பூசியை அவசர தேவைகளுக்கு பயன்படுத்த அனுமதி வழங்கியுள்ளது.

Exclusive Clips