ஜொன்சன் என்ட் ஜொன்சன் கொவிட்-19 தடுப்பூசி பயன்பாட்டை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானம்

Wednesday, 14 April 2021 - 10:37

%E0%AE%9C%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%9C%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D-19+%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF+%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88+%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D
ஜொன்சன் என்ட் ஜொன்சன் (Johnson & Johnson) கொவிட்-19 தடுப்பூசி பயன்பாட்டை, அமெரிக்கா, தென்னாபிரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் என்பன தற்காலிகமாக இடைநிறுத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரிதான குருதி உறைதல் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்படவுள்ளதாக சர்வதேச ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

6.8 மில்லியனுக்கும் அதிகமானோருக்கு, ஜொன்சன் என்ட் ஜொன்சன் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ள நிலையில், 6 பேருக்கு குருதி உறைதல் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அமெரிக்க உணவு மற்றும் ஒளடத கட்டுப்பாட்டு அதிகார சபை தெரிவித்துள்ளது.

குறித்த ஆறு பேரும், 18 முதல் 48 வயதுக்கு இடைப்பட்ட பெண்கள் என்றும், தடுப்பூசி ஏற்றப்பட்டு 6 முதல் 13 நாட்களுக்குள் அவர்களுக்கு அறிகுறிகள் தென்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exclusive Clips