எவர் கிவன் கப்பலை விடுவித்தமைக்காக 900 மில்லியன் அமெரிக்க டொலரை இழப்பீடாக கோரும் எகிப்து

Wednesday, 14 April 2021 - 17:18

%E0%AE%8E%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95+900+%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%9F%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%88+%E0%AE%87%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+
சுயேஸ் கால்வாயில் 6 நாட்களாக சிக்கியிருந்த எவர் கிவன் கப்பலை விடுவித்தமைக்காக 900 மில்லியன் அமெரிக்க டொலரை இழப்பீடாக செலுத்துமாறு எகிப்து அதிகாரிகள், ஜப்பானின் கப்பல் உரிமையாளருக்கு அறிவித்துள்ளனர்.

குறித்த கப்பல் கால்வாயில் சிக்கியிருந்ததால் நாளாந்தம் கிடைக்கும் 12 முதல் 15 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் இழக்கப்பட்டுள்ளதாக சுயேஸ் கால்வாயின் அதிகாரசபை மதிப்பீடு செய்துள்ளது.

அத்துடன் ஆசிய மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு கப்பல் ஊடாக கொண்டு செல்லப்படவிருந்த 9.6 பில்லியன் பெறுமதியான பொருட்களும் குறித்த காலப்பகுதியில் அங்கு சிக்குண்டிருந்ததாக அந்த அதிகாரசபை சுட்டிக்காட்டியுள்ளது.

இவற்றை கருத்தில் கொண்டு குறித்த இழப்பீடு கோரப்பட்டுள்ளதுடன் அதனை செலுத்த தவறினால் கால்வாயில் சிக்கியிருந்த எவர் கிவன் கப்பலை பொறுப்பேற்கவுள்ளதாகவும் சுயேஸ் கால்வாயின் அதிகாரசபை எச்சரித்துள்ளது.

Exclusive Clips