தமிழகத்தில் ஒரே நாளில் 7,819 பேருக்கு கொரோனா: 25 பேர் பலி!

Wednesday, 14 April 2021 - 22:45

%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+7%2C819+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE%3A+25+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF%21
தமிழகத்தில் நாள் ஒன்றில் அடையாளங்காணப்பட்ட அதிகளவான கொவிட்-19 நோயாளர்கள் இன்றைய தினம் பதிவாகியுள்ளனர்.

தமிழகத்தில் அதிகபட்சமாக கடந்த ஆண்டு ஜூலை மாதம் 27 ஆம் திகதி 6 ஆயிரத்து 993 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியிருந்தது.

இந்தநிலையில் இன்று தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் 7 ஆயிரத்து 819 பேருக்கு தொற்றுறுதியாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் சென்னையில் மாத்திரம் இன்றைய தினம் 2 ஆயிரத்து 564 பேர் தொற்றால் பீடிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கமைய கொவிட்-19 தொற்றால் தமிழகத்தில் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 9 லட்சத்து 54 ஆயிரத்து 948 ஆக அதிகரித்துள்ளது.

அதேநேரம் தமிழகத்தில் இன்றைய தினம் 25 கொவிட்-19 மரணங்களும் பதிவாகியுள்ள நிலையில், மொத்த மரணங்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 970 ஆக அதிகரித்துள்ளது.Exclusive Clips