அஸ்ட்ரா-செனகா தடுப்பூசி பயன்பாட்டை நிரந்தரமாகக் கைவிட்ட டென்மார்க்

Thursday, 15 April 2021 - 10:58

%E0%AE%85%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AE%95%E0%AE%BE+%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF+%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D
கொவிட்-19 தடுப்பூசியான அஸ்ட்ரா-செனகா தடுப்பூசி பயன்பாட்டை டென்மார்க் நிரந்தரமாக கைவிட்டுள்ளது.

குறித்த ஊசியால் பலருக்கு பக்க விளைவுகள் ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டு சுகாதார ஆணைக்குழுவை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அஸ்ட்ரா-செனகா தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களில் பலருக்கு தீவிர இரத்த உறைவு ஏற்பட்டுள்ளதாக டென்மார்க் சுகாதார ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

குறித்த தடுப்பூசியை தொடர்ந்து பயன்படுத்துமாறு உலக சுகாதார அமைப்பும், ஐரோப்பிய ஒளடத கண்காணிப்பு குழுவும் பரிந்துரைத்துள்ள போதிலும், அஸ்ட்ரா-செனகா தடுப்பூசி இன்றி ஏனைய தடுப்பூசிகளை செலுத்தும் பணிகள் தொடரும் என டென்மார்க் சுகாதார ஆணைக்குழுவின் பணிப்பாளர் சோரன் ப்ரோஸ்ட்ரோம் (Soren Brostrom) தெரிவித்துள்ளார்.

பக்க விளைவுகள் காரணமாக சில ஐரோப்பிய நாடுகள் அஸ்ட்ரா-செனகா தடுப்பூசி பயன்பாட்டை இடைநிறுத்திய போதும், பின்னர் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளுக்கு அமைய அந்த நாடுகள் குறித்த தடுப்பூசியினை தொடர்ந்தும் பயன்படுத்தி வருகின்றன.

எனினும் அஸ்ட்ரா-செனகா தடுப்பூசி பயன்பாட்டை நிரந்தரமாக கைவிட்ட முதலாவது ஐரோப்பிய நாடாக டென்மார்க் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips