பாகிஸ்தான் வாழ் பிரான்ஸ் பிரஜைகளை உடனடியாக நாட்டை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தல்

Friday, 16 April 2021 - 10:10

%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9C%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%89%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D
பாகிஸ்தானில் வசித்து வரும் பிரான்ஸ் பிரஜைகளை உடனடியாக அந்நாட்டை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பிரான்ஸ் நாட்டு பத்திரிகை ஒன்றில் நபிகள் நாயகத்தை அவமதிக்கும் வகையில் கேலிச்சித்திரம் வெளியிடப்பட்டதாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சர்ச்சை ஏற்பட்டிருந்தது.

இந்த விடயத்தில் குறித்த பத்திரிக்கைக்கு ஆதரவாகவும், கருத்து சுதந்திரத்திற்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுப்பதாக பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரான் அறிவித்திருந்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாகிஸ்தான், பங்களாதேஷ் உள்ளிட்ட நாடுகளில் போராட்டங்கள் ஏற்பட்டிருந்தன.

இந்த நிலையில் பாகிஸ்தான் நாட்டில் உள்ள அமைப்பொன்று இந்த விடயத்திற்கு எதிராக தற்போது போராட்டங்களை முன்னெடுத்துள்ளது.

பாகிஸ்தானில் இருந்து பிரான்ஸ் தூதர் எதிர்வரும் 20 ஆம் திகதிக்குள் வெளியேற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கையுடன் குறித்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

பிரான்ஸ் அரசாங்கத்திற்கும் பாகிஸ்தானில் உள்ள அந்த நாட்டு பிரஜைகளுக்கும் எதிராக பாகிஸ்தானில் நடைபெற்றுவரும் இந்த போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றுள்ளனர்.

கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் இந்த போராட்டத்திற்கு இடையே வன்முறைகளும் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், வன்முறை தொடர்ந்து அதிகரித்து வருவதால் பாகிஸ்தானில் வசித்து வரும் பிரான்ஸ் பிரஜைகளை உடனடியாக அந்த நாட்டிலிருந்து வெளியேறுமாறு பிரான்ஸ் அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது.

பாகிஸ்தானில் உள்ள பிரான்ஸ் தூதரகமும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதுடன் அந்த நாட்டில் செயல்பட்டு வரும் பிரான்ஸ் நிறுவனங்கள் அனைத்தும் தற்காலிகமாக மூடுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் வசித்து வரும் பிரான்ஸ் பிரஜைகளின் உயிருக்கு அச்சுறுத்தல் நிலவி வருவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து பாகிஸ்தானில் வசித்து வரும் பிரான்ஸ் பிரஜைகள் பலரும் பாகிஸ்தானில் இருந்து வெளியேறி வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips