17 வயதான தனது காதலியை கொலைசெய்து பையில் கட்டி வீசிச்சென்ற 19 வயது இளைஞன்!

Thursday, 22 April 2021 - 16:51

17+%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1+19+%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%A9%E0%AF%8D%21
இந்தியாவின் புதுச்சேரி மாநிலத்தில், தனது காதலியைக் கொலை செய்து பையில் கட்டி சுடுகாட்டில் வீசிய  19 வயதான இளைஞர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

புதுச்சேரி பொறையூர்பேட்டையைச் சேர்ந்த சட்டத்தரணியொருவரிடம் சென்று, தான் ஒரு கொலை செய்து விட்டதாகவும் தனக்கு முன் பிணை பெற்றுத்தருமாறும் கோரியுள்ளார்.

அதிர்ச்சியடைந்த சட்டத்தரணி, இளைஞரை சமாதானப்படுத்தி விட்டு உடனடியாக வில்லியனூர் காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளார்.

புதுச்சேரி சந்தைக் குப்பம் கிராமத்தைச் ராஜஸ்ரீ என்ற 17 வயதான யுவதி தினசரி பேருந்தில் பாடசாலை சென்று வந்தபோது, அதில் பயணித்த பிரதீஷ் என்ற மேற்படி இளைஞருடன் காதல் தொடர்பு ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே பாடசாலை படிப்பை முடித்த ராஜஸ்ரீ, தனியார் கல்லூரி ஒன்றில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

அப்போது அவருக்கு பிரதீஷின் மோசமான நடவடிக்கைகள் குறித்து தெரியவரவே அவரிடம் இருந்து ராஜஸ்ரீ விலக ஆரம்பித்துள்ளார்.

அதன்படி, பொறையூர்பேட்டைக்கு பேருந்தில் சென்று இறங்கியபோது, அங்கு உந்துருளியில் காத்திருந்த பிரதீஷ், அவரை அழைத்துக் கொண்டு அருகில் உள்ள சுடுகாட்டுப் பகுதிக்கு சென்றுள்ளார். அங்கு இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அதன்போது பிரதீஷின் சகோதரனான 17 வயதான சிறுவன் அங்கு சென்றுள்ளார். இருவருமாக சேர்ந்து ராஜஸ்ரீயின் கழுத்தை நெரித்துக் கொலை செய்ததுடன்.

பின்னர் அங்கு கிடந்த பையினுள் சடலத்தை இட்டு, வீசி விட்டு வீடு திரும்பியுள்ளதாக விசாரணைகளிலிருந்து. தெரியவந்துள்ளது.

Exclusive Clips