பிராணவாயு விநியோகத்திற்கு எந்தவித தடையும் ஏற்படுத்தப்பட மாட்டாது - மத்திய அரசு

Thursday, 22 April 2021 - 19:40

%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4+%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81+-+%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81
இந்தியாவில் பிராணவாயு விநியோகத்திற்கு எந்தவித தடையும் ஏற்படுத்தப்பட மாட்டாது என மத்திய அரசாங்கம் அறிவித்துள்ளது.

அத்துடன், எந்தவொரு மாநிலத்திற்கும், விநியோகத்தை மட்டுப்படுத்த முடியாது என்றும் அந்த அரசாங்கத்தின் உயர் அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

பல மாநிலங்களில், மருத்துவ பிராணவாயு விநியோகம் தொடர்பில் கடுமையான நிலைப்பாடு கடைப்பிடிக்கப்பட்டுவரும் நிலையில், மத்திய அரசின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதேநேரம், தொழில்துறை நோக்கங்களுக்காக பிராணவாயு விநியோகிப்பது, மறு அறிவித்தல்வரை தடைசெய்யப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Exclusive Clips