இந்தியாவில் 900,000க்கும் அதிகமானோருக்கு கொவிட்-19 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன

Thursday, 06 May 2021 - 22:04

%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+900%2C000%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D-19+%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A9
இந்தியாவில் 18 வயது முதல் 44 வயதுக்கு இடைப்பட்ட 900,000 அதிகமானோருக்கு கொவிட்-19 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

12 மாநிலங்களை சேர்ந்தவர்களுக்கு இவ்வாறு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் நேற்றைய தினம் 19 லட்சத்துக்கும் அதிகமான கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

இந்தியாவில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது.

இந்தநிலையில் அங்கு தடுப்பூசிகள் செலுத்தும் நடவடிக்கைகளும் விரைவுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை தமிழகத்தில் இன்றைய தினம் 24 ஆயிரத்து 898 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

அத்துடன் 195 கொவிட் மரணங்களும் பதிவாகியுள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.


Exclusive Clips