பிரேசிலில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 25 பேர் பலி

Friday, 07 May 2021 - 11:57

%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+25+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF
பிரேசில் நாட்டின் ரியோடி ஜெனிரோ நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காவல்துறை உத்தியோகத்தர் உட்பட 25 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

போதைப்பொருள் கடத்தல்காரர்கள் தங்கள் கும்பலுக்காக சிறுவர்களை சேர்ப்பதாக வெளிவந்த தகவலையடுத்து நகரின் ஜாகரெசின்ஹோ பகுதிக்கு அந்நாட்டு காவல்துறை அதிகாரிகள் விரைந்துள்ளனர்.

இதன்போது கடத்தல் காரர்களுக்கும்  காவல்துறை உத்தியோகத்தர்களுக்கும் இடையில் இந்த பரஸ்பர துப்பாக்கிச்  சூடு  இடம்பெற்றுள்ளது.

இதில் 25 பேர் பலியானதுடன் மேலும்  இரு நபர்கள் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானபோதும் உயிர்த்தப்பியுள்ளனர்.

மேற்படி சம்பவம் தொடர்பில் ரியோ மாநில பல்கலைக்கழகத்தின் வன்முறை பகுப்பாய்வுக்கான ஆய்வகத்தைச் சேர்ந்த சமூகவியல் பேராசிரியர் இக்னாசியோ கேனோ, காவல்துறையினர் சோதனைக்கு அளித்த காரணங்களை நிராகரித்துள்ளார்.

மேலும் சிறுவர்களை கடத்தல்காரர்கள் தங்களது குழுவுக்கு இணைத்துக் கொள்ள முயற்சிக்கின்றனர் என்ற விடயம் நகைப்புக்குரியது எனவும் தெரிவித்துள்ளார். ஏனெனில் இந்த குழுவில் சிறுவர்களும் இணைந்து கடத்தலில் ஈடுபடுகின்றமை அனைவரும் அறிந்ததே என குறிப்பிட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் அந்நாட்டு காவல்துறையினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 
Exclusive Clips