வாய் வழியாக உட்கொள்ளும் கொவிட் தடுப்பு மருந்து இந்தியாவில் அறிமுகம்!

Monday, 17 May 2021 - 11:52

%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%89%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%21
உலகம் முழுவதும் வியாபித்துள்ள கொவிட் தொற்று காரணமாக நாளாந்தம் பல தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுவதுடன், மரணங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றது.

கொவிட் தடுப்பூசி செலுத்துதலே இந்த பிரச்சினைக்கு  தற்போது தீர்வாக வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவில், சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்ட் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவெக்சின் ஆகிய தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்படுகின்றதுடன், ரஷ்யாவின் ஸ்புட்னிக் தடுப்பூசியும் தற்போது பயன்படுத்தப்படுகின்றது.

இந்நிலையில், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி அமைப்பு (DRDO) கொவிட் தொற்றுக்கு எதிரான 2-டிஜி (2-Deoxy-D-Glucose (2-DG) என்ற மருந்தை தயாரித்துள்ளது.

சாதாரண மருந்து போல் வாய்வழியாக உட்கொள்ளும் வகையில் இந்த மருந்து தயாரிக்கப்பட்டுள்ளதுடன், அதனை தண்ணீரில் கரைத்து குடிக்கவேண்டும்.

டிஆர்டிஓ ஆய்வகம் மற்றும் ஐதராபாத்தை மையமாகக் கொண்ட வைத்தியர் ரெட்டிஸ் ஆய்வகங்கள் இணைந்து இந்த மருந்தை உருவாக்கி உள்ளன.

இந்த மருந்தானது, மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நோயாளிகளை விரைவாக குணப்படுத்த உதவுவதுடன், பிராணவாயுவை (ஒக்சிஜன்) சார்ந்திருக்க வேண்டிய ஆபத்தான நிலையை குறைப்பதாக பரிசோதனைகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

எனவே, அவசரகால தேவைக்கு இந்த மருந்தை பயன்படுத்தலாம் என இந்தியாவின் மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி அளித்துள்ளது.

இதையடுத்து இன்று (17) இந்தியாவின் டெல்லி நகரில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் ஆகியோரினால் 2-டிஜி மருந்து அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

இதன் முதல்கட்டமாக 10,000 மருந்து பக்கெட்டுகளை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வழங்கினார்.

அத்துடன் இந்த மருந்துகள் டெல்லியில் உள்ள மருத்துவமனைகளில் விரைவில் விநியோகிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Exclusive Clips