69 ஆவது பிரபஞ்ச அழகுராணியானார் அண்ட்றியா மெஸா

Monday, 17 May 2021 - 15:03

69+%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A+%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE+%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B8%E0%AE%BE
69 ஆவது பிரபஞ்ச அழகுராணியாக (miss universe) மெக்ஸிகோவைச் சேர்ந்த அழகியான அண்ட்றியா மெஸா (Andrea Meza) முடிசூட்டப்பட்டுள்ளார்.

அமெரிக்காவின் ஃப்ளோரிடாவில் நேற்றிரவு இடம்பெற்ற 2020 பிரபஞ்ச அழகுராணிப் போட்டியிலேயே அவர் முடிசூட்டப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அண்ட்றியா மெஸா, மென்பொருள் பொறியியலாளராகவும், விளம்பர நடிகையாகவும் செயற்படுகின்றார்.

அவர் பிரபஞ்ச அழகுராணிப் போட்டியில் மகுடம் வென்ற மூன்றாவது மெக்ஸிகோ பெண் என்பது குறிப்பிடத்தக்கது.

Exclusive Clips