இந்தியாவை அண்டிய நாடுகளுக்கு கொவிட்-19 தடுப்பூசிகளை விரைவாக விநியோகிக்க வேண்டும்

Monday, 17 May 2021 - 16:01

%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88+%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D-19+%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D
இந்தியாவை அண்டிய இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு விரைவாக கொவிட்-19 தடுப்பூசிகளை விநியோகிக்குமாறு ஐக்கிய நாடுகளின் அவசர சிறுவர் நிதியமான யுனிசெப் அமைப்பு, ஜீ-7 நாடுகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

யுனிசெப் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஹென்ரியெட்டா ஃபோரெ இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

தற்போது இந்தியாவில் ஏற்பட்டுள்ள கொரோனா பரவலின் இரண்டாவது அலையினால் அந்த நாடு பெரும் நெருக்கடியில் உள்ளது.

அதனை அண்டிய நாடுகளான இலங்கை, நேபாளம் மற்றும் மாலைத்தீவு போன்ற நாடுகளிலும் குறிப்பிடத்தக்களவு வேகமாக கொவிட் -19 நோய்ப்பரவல் அதிகரித்து வருகிறது.

இந்த நோய்ப் பரவலை கட்டுப்படுத்தாமல் விட்டால்  நெருக்கடி நிலைமையும், புதிய வகையான திரிபடைந்த வைரஸ்களும் உருவாகக்கூடிய சூழ்நிலையும் ஏற்படும்.

எனவே இந்த மோசமான நிலைமையை தடுப்பதற்கு துரிதமாக கொவிட்-19 தடுப்பூசிகளை விநியோகிக்க வேண்டும்.

இதற்கான நடவடிக்கைகளை ஜீ-7 நாடுகள், கோவொக்ஸ் திட்டத்தின் ஊடாக முன்னெடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
Exclusive Clips