சிஐடி பிரதிப் பணிப்பாளர் பதவிக்கு முதல் முறையாக பெண் அதிகாரியொருவர் நியமனம்!

Friday, 11 June 2021 - 16:42

%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%90%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D%21
குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பிரதி பணிப்பாளராக சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் இமேஷா முதுமால நியமிக்கப்பட்டுள்ளார்.

காவல்துறை ஊடக பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பிரதி பணிப்பாளராக பெண் அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்ட முதல் சந்தர்ப்பம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

2007 ஆம் ஆண்டு உதவி காவல்துறை அத்தியட்சகராக காவல்துறையில் இணைந்துகொண்ட இவர், 14 வருட சேவைக்காலத்தை பூர்த்தி செய்துள்ளார். 

ருஹுணு பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானமாணி பட்டத்தையும், திறந்த பல்கலைக்கழகத்தில் சட்டமாணி பட்டத்தையும் பெற்றுக்கொண்டுள்ள சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் இமேஷா முதுமால, அமெரிக்காவின் ஹவாய் காவல் பயிற்சி நிறுவகத்தில், நெருக்கடி முகாமைத்துவம் தொடர்பான விசேட டிப்ளோமாவையும் பெற்றுள்ளார்.

அவ்வாறே, தாய்லாந்தின் பெங்கொக் நகரில் அமெரிக்க எவ்.பி.ஐயினால் நடாத்தப்படும் பணச்சலவை தடுப்பு டிப்ளோமாவையும், மலேசியா காவல்துறை அகடமியில் சமூக காவல்துறை தொடர்பான விசேட டிப்ளோமாவையும் பெற்றுள்ளார்.

மேலும் இந்தியாவின், ஹைதராபாத் காவல்துறை அகடமியில் இணையக்குற்றம் தொடர்பான விசேட டிப்ளோமாவையும் பெற்றுள்ள இமேஷா முதுமால, நுகேகொட பிராந்திய குற்ற விசாரணை பிரிவிலும், காவல்துறை இசைவு சான்றிதழ் பிரிவிலும் கடமையாற்றியுள்ளார்.
Exclusive Clips